மாமல்லையில் சாதனை படைத்த மருத்துவர்களௌ விருது வழங்கும் விழா

80பார்த்தது
1000 அறுவை சிகிச்சைகள் செய்து சாதனை படைத்த மருத்துவர்களுக்கு விருது.

தமிழகத்தில் கடந்த 2022-ம் ஆண்டில் இருந்து இதுவரை 96 சதவிதம் அளவிற்கு குழந்தைகள் மீது பாலியல் வன்கொடுமை நடக்கும் சம்பவம் அதிகரித்துள்ளது.

நடிகை கவுதமி பகீர் குற்றச்சாட்டு!

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த வடநெம்மேலியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தமிழகத்தில் மருத்துவ துறையில் சிறந்து விளங்கி, 1000 அறுவை சிகிச்சைகள் செய்து சாதனை படைத்த மருத்துவர்களை கவுரப்படுத்தும் வகையில் விருது வழங்கும் விழா மற்றும் மாடல் அழகிகளின் ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு சமூக ஆர்வலர் திருநங்கை அப்சரா ரெட்டி தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் திரைப்பட நடிகை கவுதமி, செஸ் கிராண்ட மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த், திரைப்பட நடிகர் காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் கலந்து கொண்டு 1000 அறுவை சிகிச்சைகள் செய்து மருத்துவ துறையில் சாதனை படைத்த மருத்துவர்களை கவுரப்படுத்தும் வகையில் அவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்து அவர்களின் சாதனையை வாழத்தி புகழாரம் சூட்டினர். மேலும் பேசன் ஷோ மகளீர் பங்கேற்ற ஆடை அலங்கார அணிவகுப்பு நடந்தது. 30-க்கும் மேற்பட்ட அழகிகள் விதவிதமான ஆடைகள் அணிந்து, ஒய்யாரமாக நடந்து வந்து ஆடை அலங்கார போட்டியில் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி