பேருந்து ஏன் நிறுத்தவில்லை என்று கேட்ட பெண் பயணியை தகாத வார்த்தைகளால் வசைப்பாடிய அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரின் வீடியோ வைரல்.
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த வீட்டிலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி நேற்று முன்தினம் சென்னை சென்று திரும்பும் போது பனையூர் சுங்கச்சாவடியில் சென்னையிலிருந்து சிதம்பரம் நோக்கி கிழக்குக் கடற்கரை சாலை மார்க்கமாக செல்லும் தமிழ் நாடு அரசு பேருந்தை கை போட்டு நிறுத்த முயற்சி செய்துள்ளனர். ஆனால் பேருந்து அங்கு நிற்காததால் பின்னாடி வந்த வேறொரு பேருந்தில் ஏறி கல்பாக்கம் வந்தனர் அப்போது இவர்கள் கை போட்டு நிறுத்தச் சொல்ல நிற்காத பேருந்து கல்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்தது அப்போது அந்தப் பெண் நாங்கள் அங்கு நிறுத்தச் சொன்னோமே ஏன் நிறுத்தவில்லை என்று கேட்டதற்கு பேருந்தின் ஓட்டுனரும் நடத்துனரும் அந்தப் பெண்மணியை தகாத வார்த்தைகளால் வசைப்பாடி பேருந்தில் இருந்தபடியே அடிக்கப் பாய்ந்ததை வீடியோ வீடியோ எடுத்த நபரையும் ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்தனர் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. பெண் பயணிகளிடம் எப்படி நடந்து கொள்வது என்று கூட தெரியாத நடத்துனர் ஓட்டுநர்கள் மீது தமிழக அரசு மற்றும் போக்குவரத்து துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.