வால்பாறை |

கோவை: SDPI கட்சியினர் மெழுகுவத்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்

பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வக்ஃபு திருத்தச் சட்டம் முஸ்லிம்களை வஞ்சிக்கும் செயலாகும். இது முஸ்லிம்களின் உரிமையை நசுக்கும் கடுமையான சட்டமாகும். ஆளும் மத்திய அரசு தொடர்ச்சியாக முஸ்லிம்களுக்கு எதிராக, சிறுபான்மையினருக்கு எதிராக இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இதனைக் கண்டிக்கும் வகையில், நாடு முழுவதும் எஸ். டி. பி. ஐ கட்சி தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நேற்று இரவு கோவை உக்கடம் வள்ளியம்மை பேக்கரி எதிரில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட 300-க்கும் மேற்பட்ட எஸ். டி. பி. ஐ கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு கையில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

வீடியோஸ்


தமிழ் நாடு