சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியில் செயல்படும் பிரியாணி கடையில், ரமலான் பண்டிகையை முன்னிட்டு பலரும் பிரியாணி வாங்கி சாப்பிட்டனர். இவர்களில் 20 க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு என கடும் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உணவக நிர்வாகத்திடம் முறையிட்டும் திமிர் பதில் வந்ததால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.