எம்புரான் படத்தில் வரும் பாபா பஜ்ரங்கி கதாபாத்திரம் இஸ்லாமியர்களை கொல்வது குஜராத் காலவரை நினைவுபடுத்துவதாகக்கூறி படத்தில் இருந்து அந்த காட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நிஜ பாபா (பாபு) பஜ்ரங்கி பேசும் வீடியோ வைரலாகி வருகிறது. அதில், கர்ப்பிணி பெண் ஒருவரை தான் கொன்றதாகவும் வீட்டிற்கு வந்து படுத்த போது ஒரு ராஜாவைப் போல் உணர்ந்ததாகவும் பேசியிருக்கிறார். கொலை செய்தவரே பெருமையாக தனது குற்றத்தை பற்றி பேசும் போது அதை சினிமாக எடுத்தவர்கள் ஏன் காட்சிகளை நீக்க வேண்டும் என கேள்வி எழுந்துள்ளது.