பீகார் முன்னாள் CM லாலு பிரசாத் (76) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லி செல்வதற்காக பாட்னா விமான நிலையத்திற்கு அவர் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது உடல்நிலை பாதிக்கப்படவே, அவர் உடனடியாக தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. விரைவில் டெல்லி எய்ம்ஸ் ஹாஸ்பிடலுக்கு அழைத்து செல்லப்படவுள்ளார்.