சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய்யை சந்தித்து அறக்கட்டளைக்கு உதவி கேட்க வந்த பெண்ணிடம் நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தனது மாற்றுத்திறனாளி மகனுடன் உதவி கேட்க வந்த பெண் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது தவெகவினர் தொடர்ந்து கூச்சலிட்டனர். மேலும், அப்பெண்ணை சூழ்ந்துகொண்டு முழக்கமிட்டதால், அவர் பேட்டியளிக்காமல் சென்றார்.