லேசான காயத்திற்கு ரூ.1.6 லட்சத்துக்கு பில் கொடுத்த மருத்துவமனை

71பார்த்தது
லேசான காயத்திற்கு ரூ.1.6 லட்சத்துக்கு பில் கொடுத்த மருத்துவமனை
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள மருத்துவமனையில், கையில் ஏற்பட்ட காயம் காரணமாக சிறுவன் அனுமதிக்கப்பட்டார். சிறுவனுக்கு காயம் ஏற்பட்டஇடத்தில் 7 தையல்கள் போடப்பட்டது. தொடர்ந்து, இந்த சிகிச்சைக்காக ரூ.1.6 லட்சம் பில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனைப் பார்த்து பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து கேட்டதற்கு, “சிறுவனுக்கு கையில் ஆழமாக காயம் ஏற்பட்டது. இதற்காக அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது” என மருத்துவர் துஷ்யந்த் விளக்கம் அளித்திருக்கிறார்.

தொடர்புடைய செய்தி