விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று(மார்ச்.13) வெளியிடப்பட்ட 6-ஆம் கட்ட மாவட்டச் செயலாளர்கள் பட்டியலில் தென்சென்னை மேற்கு மாவட்டச் செயலாளராக ஆர்.சபரிநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வெறும் 27 வயதாகும் இவருக்கு மாவட்டச் செயலாளர் பதவி பல்வேறு போட்டிக்கு பின்னரே அளிக்கப்பட்டது. இவர் விஜய்யின் முன்னாள் ஓட்டுநரும் தற்போதைய உதவியாளருமான ராஜேந்திரனின் மகன் ஆவார். இதனால் விஜய் கட்சியிலும் வாரிசு அரசியல் தலைதூக்குகிறதா என கட்சியினர் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது.