இங்கிலாந்தில் உள்ள முன்னணி பல்கலைக்கழகம் ஒன்று நடத்திய ஆய்வில், தினமும் 50 கிராம் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை எடுத்துக் கொள்பவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து 15% அதிகமாக இருப்பது கண்டறிந்துள்ளது. தினமும் 100 கிராம் ஆட்டிறைச்சி உட்கொள்பவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து 10% அதிகமாக இருப்பதாகவும், 100 கிராம் கோழியை தினமும் எடுத்துக் கொள்பவர்களுக்கு நீரிழிவு ஆபத்து 8% அதிகரித்து இருப்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.