திண்டிவனம் - Tindivanam

கட்டணமில்லா படிப்பகம் திறப்பு

கட்டணமில்லா படிப்பகம் திறப்பு

குருசுபராஜபதி 22வது பிறந்த நாளையொட்டி, கட்டணமில்லா படிப்பகம் திறப்பு விழா நடந்தது. குருசுபராஜபதி மாணவர்கள், இளைஞர்கள் நலன்கல்வி ஆரோக்கிய நலவாழ்வு அறக்கட்டளை சார்பில் விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே நடந்த நிகழ்ச்சிக்கு, அறக்கட்டளைத் தலைவர் பசுபதி தலைமை தாங்கினார். துணைச் செயலாளர் திருமலை, துணைத் தலைவர்கள் ராம்குமார், சபரி, பொருளாளர் பிரேமா முன்னிலை வகித்தனர். செயலாளர் பிரபாகரன் வரவேற்றார். இந்த கட்டணமில்லா படிப்பகத்தை வி. ஆர். பி. , மேல்நிலைப் பள்ளி தாளாளர் சோழன் திறந்து வைத்தார். படிப்பகத்தில், இளைஞர்கள், மாணவர்கள் பயன்பெறும் வகையில் மத்திய, மாநில அரசு பணி சம்மந்தமான நீட், ஆரோக்கிய நல்வாழ்வியல் கல்வி உட்பட பயனுள்ள வகையிலான புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளது நிகழ்ச்சியில், அ. தி. மு. க. , மாவட்ட பாசறை இணைச் செயலாளர் வினித், நகர செயலாளர் ராமதாஸ், மாவட்ட எம். ஜி. ஆர். , இளைஞரணி தலைவர் குமரன், ஒன்றிய செயலாளர்கள் சுரேஷ்பாபு, முருகன். ராமதாஸ், நகர கூட்டுறவு வங்கி தலைவர் தங்கசேகர், மாவட்ட ஜெ. , பேரவை இணைச் செயலாளர் திருப்பதி பாலாஜி, கவுன்சிலர்கள், வார்டு செயலாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். அறக்கட்டளை துணைத் தலைவர் சபரிவேலீஸ்வரன் நன்றி கூறினார்.

வீடியோஸ்


ఖమ్మం జిల్లా