பட்ஜெட்டில் ரூபாயின் இலச்சினையை மாற்றியது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “நாளை தாக்கல் செய்யப்படவுள்ள தமிழ்நாடு பட்ஜெட்டில் ‘₹'-க்கு பதில் 'ரூ' என்று மாற்றி இலச்சினை வெளியிட்டு, தமிழ்நாடு அரசு தனது உணர்வினை வெளிப்படுத்தியுள்ளது. தமிழர்கள் மீது வன்மம் கொண்டவர்களுக்கு இது பிடிக்காது. தமிழர்கள் இவ்விஷயத்தில் பெருமை கொள்ள வேண்டுமே தவிர, இந்திய இறையாண்மைக்கே பிரச்சனை வந்தது போல பிதற்றக்கூடாது” என்றார்.