பாலியல் தொல்லை கொடுத்த மாமனாரை எரித்துக் கொன்ற மருமகளுக்கு விடுதலை

75பார்த்தது
கடலூர் மாவட்டம் மந்தாரக்குப்பம் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவரின் மகன் ராஜா. இவர் வெளியூரில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், ராஜாவின் மனைவிக்கு அவரது தந்தை சரவணன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மருமகள் தனது மாமியாருடன் சேர்ந்து சரவணனின் அந்தரங்க உறுப்பு மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்தனர். தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனர். பாலியல் தொல்லை அளித்தது உறுதி செய்யப்பட்டதால் தற்காப்புக்காக கொலை செய்ததாகக் கூறி இருவரும் விடுவிக்கப்பட்டனர்.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி