
விழுப்புரம்: விசிக நிர்வாகி இடை நீக்கம்
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றிய செயலாளர், கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டார். கட்சியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்ட விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றிய வி. சி. , செயலாளர் விஜயகுமார் என்கிற வெற்றிவேந்தன், கட்சி பொறுப்பிலிருந்து 6 மாதம் இடைநீக்கம் செய்யப்படுவதாக கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் திலீபன் நேற்று (செப்.,27) அறிவித்துள்ளார்.