
மரக்காணம்: மின்சாரம் தாக்கி ஒருவர் மரணம்
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த ராவணாபுரத்தைச் சேர்ந்த முனியன் (42) இவர், நேற்று (அக்.,8) அதே ஊரைச் சேர்ந்த புருஷேத்தமன் நிலத்தில் தண்ணீர் இறைப்பதற்காக மோட்டார் சுவிட்சை ஆன் செய்தார். அப்போது மின்சாரம் தாக்கி முனியன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து இன்று (அக்.,9) பிரம்மதேசம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.