பேருந்தும், லாரியும் மோதிய கோர விபத்தில் பெண் பலி

50பார்த்தது
மதுரை மாவட்டம் விரகனூர் ரவுண்டானா அருகே தனியார் பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். பரமக்குடியில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று, நின்றுகொண்டிருந்த லாரி மீது அதிபயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த நிலையில், ஒரு பெண் உயிரிழந்துள்ளார். மேலும், பேருந்தில் சிக்கிய பயணிகளை மீட்கும் பணியில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

நன்றி: புதியதலைமுறை

தொடர்புடைய செய்தி