நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் பதவிக்கு பணம் பெறப்படுவதாக எழுந்துள்ள புகாரால் சர்ச்சை வெடித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டச் செயலாளராக உள்ள பிரகாசம் என்ற குட்டி கட்சி பொறுப்புக்கு பணம் பெற்றதாக கூறப்படும் ஆடியோ வெளியாகியுள்ளது. அந்த ஆடியோவில், சஞ்சய் என்ற நிர்வாகி செயற்குழு உறுப்பினர் பதவி பெற குட்டியிடம் ரூ.40,000 கொடுத்தாகவும், மீதி ரூ.40,000 பணத்தை யாரிடம் தர வேண்டும் என கூறியுள்ளார்.