டாஸ்மாக் முறைகேடு: முதல்வர் விளக்கம் அளிக்க அண்ணாமலை வலியுறுத்தல்

65பார்த்தது
டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மதுபான ஆலைகளில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் ரூ.1000 கோடி மோசடி செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டியில், “ டாஸ்மாக் முறைகேடு விவகாரம் வரும் நாட்களில் பூதாகரமாக வெடிக்கும். இந்த முறைகேடுகளை மறைக்கவே தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை கையில் எடுத்து உள்ளனர். டாஸ்மாக் முறைகேடு குறித்து முதலமைச்சர் கட்டாயம் விளக்கம் அளிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

நன்றி: polimernews

தொடர்புடைய செய்தி