கர்நாடக மாநிலத்தில் கடந்த 11ஆம் தேதி பைக்கில் வந்த நபர் ஒருவர் முதியவரிடம் இருந்து தங்க மோதிரத்தை பறித்துச் சென்றுள்ளார். ஹெல்மட் அணிந்தவாறு முதியவரிடம் சென்ற திருடன், வழி கேட்டுள்ளார், அதற்கு முதியவர் பதிலளித்த சமயத்தில் அவரது கையில் அணிந்திருந்த தங்க மோதிரத்தை பறித்துச் சென்றுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்த போலீசார், குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.