அமெரிக்காவின் கலிபோர்னியாவில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இண்டியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 4ஆவது சுற்று ஆட்டத்தில் கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) - டிமிட்ரோவ் (பல்கேரியா) ஆகியோர் மோதினர். இதில் தொடக்கம் முதலே நன்றாக விளையாடிய அல்காரஸ் 6-1 மற்றும் 6-1 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றிப் பெற்றார். இதனால், அவர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். காலிறுதியில் பிரான்சிஸ்கோ செருண்டோலோ உடன் மோத இருக்கிறார்.