
குழந்தைகளுக்கான வாகனம்.. ரூ.4.3 லட்சத்திற்கு அறிமுகம் செய்த Lamborghini
பிரபல சொகுசு கார் நிறுவனமான Lamborghini, தற்போது புதிதாக குழந்தைகளை தள்ளிச் செல்லும் Stroller-களை அறிமுகம் செய்துள்ளது. அதன் விலை இந்திய மதிப்பில் ரூ.4.3 லட்சம் என கூறப்படுகிறது. உலகளவில் வெறும் 500 வண்டிகளை மட்டுமே அந்நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்த வண்டியில் கொசு வலை உள்ளிட்ட குழந்தைகளுக்குத் தேவையான அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது பெற்றோர்கள் எந்த சூழ்நிலைக்கும் தயாராக இருப்பதை உறுதி செய்யும் என கூறப்படுகிறது.