
முதலமைச்சரை ‘முட்டாள்’ என விமர்சித்த அண்ணாமலை
நாளை (மார்ச் 14) தாக்கல் செய்யப்படவுள்ள தமிழக பட்ஜெட்டில் ரூபாயின் குறியீட்டிற்கு பதிலாக தமிழ் எழுத்து ‘ரூ’ பயன்படுத்தப்பட்டதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார். “இந்திய ரூபாய் குறியீட்டை வடிவமைத்தவர் தமிழரும், முன்னாள் திமுக எம்எல்ஏவின் மகனுமான உதயகுமார் ஆவார். அதைத்தான் இந்திய நாடு பயன்படுத்தி வருகிறது. ஆனால் நீங்கள் எவ்வளவு முட்டாளாக ஆகிவிட்டீர்கள் திரு.ஸ்டாலின்” என பதிவிட்டுள்ளார்.