முசிறி - Musiri

சாராய ஊரல் போட்டவர் கைது

முசிறி அருகே விவசாய தோட்டத்தில் சாராய ஊரல் வைத்திருந்தவர் கைது திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா, நெட்டவேலம்பட்டி பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தில் சாராய ஊரல் வைத்திருப்பதாக முசிறியில் செயல்படும் துறையூர் அமலாக்க பணியகபிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அமலாக்க பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் செல்லத்துரை தலைமையிலான போலீசார் நெட்டவேலம்பட்டி பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு விசாரணை மேற்கொண்டனர். அப்போது விவசாயி முத்துச்சாமி (50) என்பவரது தோட்டத்தில் சாராயம் காய்ச்ச வைத்திருந்த 250 லிட்டர் சாராய ஊரல் , மற்றும் 6 லிட்டர் கள்ளசாராயம் இருந்ததை கைப்பற்றினர். இதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து முத்துசாமியை கைது செய்து துறையூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

வீடியோஸ்


నల్గొండ జిల్లా