
திருச்சியில் மதுவுக்கு அடிமையான வாலிபர் தற்கொலை
திருச்சி வரகனேரி பென்சனர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மகா மணிகண்டன் (வயது 31). இந்த வாலிபருக்கு குடிப்பழக்கம் ஏற்பட்டது. இதனால் தினமும் மது அருந்தி வந்தார். இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த மகா மணிகண்டன் பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து மயங்கி விழுந்தார். உறவினர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிரசிகிச்சை அளித்த போதிலும் சிகிச்சை பலனளிக்காமல் மகா மணிகண்டன் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது தாயார் காந்தி மார்க்கெட் போலீசில் புகார் செய்தார். அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.