

திருச்சி: திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறந்த அமைச்சர்
தமிழக முதல்வர், மு. க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பாக சத்திரம் பேருந்து நிலையம் அருகில் பொதுமக்களின் தாகம் தணிக்கும் வகையில் கோடைகால நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதனை தெற்கு மாவட்ட கழக செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், பழங்கள், வெள்ளரிப்பிஞ்சு, இளநீர் மற்றும் குளிர்பானங்கள் ஆகியவற்றை வழங்கி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், கிழக்கு மாநகர கழகச் செயலாளர் மு. மதிவாணன், மற்றும் மாவட்ட, மாநகர நிர்வாகிகள் செங்குட்டுவன், சபியுல்லா, குணசேகரன், கோவிந்தராஜ், மூக்கன், லீலாவேலு, சரோஜினி, பகுதி கழகச் செயலாளர் மோகன் மற்றும் மாநகரக்கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்று சிறப்பித்தனர்