சட்டப்பேரவையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட் நாளை (மார்ச். 14) தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் ’₹' பதிலாக 'ரூ' இலச்சினையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். கடந்தாண்டு பட்ஜெட்டில் ரூபாய் அடையாள குறியீடு பயன்படுத்தப்பட்ட நிலையில் இந்தாண்டு அதற்கு பதில் தமிழ் எழுத்தான 'ரூ' பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழர் வடிவமைத்த ரூபாய்க்கான குறியீட்டை திமுக மாற்றியுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.