திருவெறும்பூர் - Thiruverumbur

திருச்சியில் நடைபெற்ற குவோன்கிடோ சாம்பியன்ஷிப் போட்டி

6வது மாநில அளவிலான குவோன்கிடோ சாம்பியன்ஷிப் போட்டிகள், மற்றும் தேசிய அளவில் நடைபெற உள்ள போட்டிகளில் பங்கு கொள்வதற்கான வீரர்கள் தேர்வு திருச்சி பொன்மலைபட்டியில் உள்ள தனியார் பள்ளியில் பயிற்சியாளர் சந்துரு தலைமையில் நேற்று நடைபெற்றது. போட்டிகளில் திருவாரூர், , சேலம், கோயமுத்தூர், ஈரோடு, திருச்சி, நாமக்கல், , நாகப்பட்டினம், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட வீரர் -வீராங்கனைகள் பங்கேற்றனர். போட்டிகள் 8, 10, 12, 14, 17, 19 வயதுக்குட்பட்ட மற்றும் 19வயதிற்கு மேற்பட்ட வீரர் - வீராங்கனைகள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற அணிகளுக்கு சிறப்பு விருந்தினராக திருச்சி சரக மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு கோப்பைகளையும், பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டி, வாழ்த்து தெரிவித்தார். இப்போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர் - வீராங்கனைகள் நவம்பர் மாதம் 8ம்தேதி முதல் 10ம்தேதி வரை மத்தியபிரதேசம் மாநிலம் இந்தூரில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிகளில் பங்கு பெற உள்ளனர்.

வீடியோஸ்


నల్గొండ జిల్లా