திருச்சி மாவட்டம், முசிறி பகுதியில் இன்று (மார்ச் 13) காலை நேரத்தில் 7.40 மணிக்கு மேலும் நிலவிய கடும் பனிப்பொழிவு காரணமாக சாலையில் செல்லும் வாகனங்களில் செல்லுபவர்கள் முகப்பு விளக்கை ஒளிரச் செய்தவாறு சென்றனர்.
திருச்சி மாவட்டம், முசிறி அருகே நாடார் காலனி, சேருகுடி, தும்பலம், கொளக்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் முசிறி அருகே காவேரி ஆற்றின் கரையை ஒட்டி திருச்சி - நாமக்கல் செல்லும் சாலையிலும் அப்பகுதியில் உள்ள வயல்வெளிகளிலும் காலை நேரத்தில் கடும் பனிப்பொழிவு நிலவியது. காலை 8 மணி வரையிலும் நிலவிய பனி மூட்டம் காரணமாக சாலையின் எதிரே வருபவர்கள் தெரியாத அளவிற்கு மேக கூட்டம் போல் பனி காணப்பட்டது.
இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை ஒளிரச் செய்தவாறு சாலைகளில் பயணித்தனர். வானத்தில் செல்வோர் பனி மழையில் நனைந்தது போல் உணர்வு ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர். பனிப்பொழிவை விரட்டி அடிக்கும் வகையில் உதயமாகும் காட்சியும் கண்ணுக்கு விருந்தாகவும் அமைந்திருந்தது.