மணச்சநல்லூர் - Manachanallur

செங்கல் சூளை உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை

செங்கல் சூளை உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி உறையூர் காவல்காரன் தெருவை சேர்ந்த வாசுதேவன் (72). இவர் செங்கல் சூளை வைத்து தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் சமீப காலமாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் மன அழுத்தத்தில் இருந்த வாசுதேவன் வீட்டில் யாரும் இல்லாத போது மின் விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி மகாலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் உறையூர் போலீசார் வாசுதேவன் சடலத்தை மீட்டு உடற்கூறாய்விற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வீடியோஸ்


నల్గొండ జిల్లా