
நடிகை கஸ்தூரியின் செல்போனை 'ஹேக்' செய்த மர்ம நபர்கள்
தமிழ் மற்றும் தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்துள்ள கஸ்தூரி அவ்வப்போது தனது பரபரப்பு கருத்துக்களால் சர்ச்சையில் சிக்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். தெலுங்கு பேசும் மக்களை அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரில் கைதான அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில், எனது செல்போன் 'ஹேக்' செய்யப்பட்டு விட்டது என்றும் இதனை வேறு போனில் இருந்து தெரிவிக்கிறேன் என்றும் எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.