தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்த உடனே, மகளிர் உரிமைத் தொகையாக மாதம் ரூ.2500 வழங்கப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும், “ஒவ்வொரு மாவட்டத்திலும் 2 நவோதயா பள்ளிகள் அமைக்கப்படும். அதற்கு கர்மவீரர் காமராஜர் பள்ளிகள் என பெயர் வைக்கப்படும். கல்வி மற்றும் மருத்துவத் துறையில் உயர் தரத்தை கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்படும். தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வரும் நாள் தொலைவில் இல்லை” என நம்பிக்கையாக கூறியுள்ளார்.