
சற்றுமுன்: 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை (டிச.14) தேனி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, தென்காசி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். மேலும், நாளை எந்த சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளனர்.