காங்கிரஸ் இன்னும் நேரு காலத்திலேயே இருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் குற்றச்சாட்டியுள்ளார். மேலும் டெல்லி சட்டப்பேரவை தோல்வி குறித்து அவர் கூறியதாவது, "பாஜகவை வீழ்த்தும் லட்சியத்தை மறந்து தாங்கள் தான் பெரிய கட்சி என்ற எண்ணத்தில் செயல்பட்டதால் தான் இந்த படிப்பினை அமைந்துள்ளது. "தமிழகத்தை போன்று ஒன்றிணைந்து செயல்பட்டு இருந்தால் பாஜகவை வெற்றி பெற விடாமல் தடுத்திருக்கலாம்" என்று கூறியுள்ளார்.