திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில் உள்ளது தட்டாங்கோவில் என்ற ஊர். இங்கிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் 'திருராமேஸ்வரம்' என்ற திருத்தலம் உள்ளது. ராம பிரான் இலங்கையில் போர்புரிந்தபோது உயிர் இழந்த தன்னுடைய படை வீரர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி சிவபூஜையும், நீர்க்கடனும் செய்த இடம் என்று சொல்லப்படுகிறது. இந்த தலம் ‘சீதா ராமேஸ்வரம்’ என்றும் அழைக்கப்படுகிறது.