ஆமையை மல்லாக்கப் படுக்க வைத்தால் அது அப்படியே கிடக்கும், தானாக குப்புற திரும்பிக்கொள்ள அதற்கு தெரியாது. அப்படியே கிடந்து செத்துப் போகும். ஆமையின் ஓடு மிகவும் வலுவானது, அதனை எத்தனை பலமாக தாக்கினாலும் தானும் பாதிக்கப்படாமல் ஆமையையும் அது காக்கும். கடல் ஆமைகள் 100 முதல் 200 முட்டைகளை இடும். இவற்றை கரைக்கு வந்து இட்டு விட்டு கடலுக்குள் போய்விடும். இந்தியாவில் ஐவகை நிலத்திலும் ஆமைகள் வளரும்.