நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு அரசுக்கு நிதி தராமல் ஒன்றிய அரசு துரோகம் செய்துள்ளது என திமுக அமைப்புச் செயலாளர் R.S.பாரதி தெரிவித்துள்ளார். மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் வகையில் யுஜிசி வரைவு விதிகள் உள்ளன. எல்லா வகையிலும் ஒன்றிய அரசுக்கு பொருள் ஈட்டித்தருகின்ற மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. ஆனால் பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு ஓரவஞ்சனை செய்துவிட்டது. கல்வி நிதி, 100 நாள் வேலை திட்ட நிதி என எந்த நிதியும் தர மறுக்கிறார்கள் என தெரிவித்தார்.