திண்டுக்கல்: ஒட்டன்சத்திரத்தில் செயல்பட்டு வரும் காந்தி மார்க்கெட்டுக்கு 20 ஆயிரம் பெட்டிகள் வரையிலும் தக்காளிகள் விற்பனைக்கு வந்தன. ஒரு பெட்டி ரூ.220 வரை விற்பனையான நிலையில் ஏற்கனவே இருப்பு வைத்த தக்காளி அழுகும் நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக விவசாயிகள் தக்காளிகளை விற்பனை செய்யாமல் குப்பையில் கொட்டிச் சென்றனர். இதனால், தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். மேலும், செலவு தொகை கூட சந்தையில் கிடைப்பதில்லை என வேதனையுடன் கூறுகின்றனர்.