சிவப்பு ஆப்பிளுக்கு அடுத்தபடியாக பச்சை ஆப்பிள் அதிகம் புழக்கத்தில் உள்ளது. இதில் பார்வைத் திறனை பலப்படுத்த உதவிடும் வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ளது, கண்களின் ஆரோக்கியத்தையும் காக்கக்கூடியது. எலும்புகளுக்கு வலிமை சேர்க்கும் கால்சியம் பச்சை ஆப்பிளில் இருக்கிறது. தினமும் பச்சை ஆப்பிள் சாப்பிடுவது நுரையீரல் தொடர்பான நோய் அபாயங்களை குறைக்கும் என்பது ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.