ராமேஸ்வரம் மீனவர்களை, கடலில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. இரண்டு விசைப்படகு மற்றும் 14 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது தெரியவந்துள்ளது. தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருவதை கண்டித்தும், இதற்கு நிரத்தர தீர்வு காண வேண்டியும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய அமைச்சருக்கு பலமுறை கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.