திருப்பூர்: தெக்கலூரில் இயங்கி வரும் பனியன் நிறுவனத்தில் வேலை செய்துவந்த சிறுமியை, குபேந்திரன் என்பவர் வெளியூருக்கு கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் பேரில் குபேந்திரன் கைது செய்யப்பட்டார். இதுகுறித்த வழக்கு விசாரணை இன்று (பிப்.,8) நடைபெற்றது. அப்போது, குற்றவாளியான குபேந்திரனுக்கு 35ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.