
வேலைக்கு போகச்சொன்ன பாட்டியை கொன்ற பேரன்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், தளவாய்புரத்தை சேர்ந்தவர் சரஸ்வதி (75). மகனின் வீட்டருகில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சரஸ்வதியின் மகன் பாலசுப்பிரமணியத்துடன் ஒன்றாக வசிக்க ஏற்பாடுகள் நடந்துள்ளன. இதனிடையே, வேலைக்குச் செல்லாமல் குடித்துவிட்டு கஞ்சாவிற்கு அடிமையான பேரன் ஸ்ரீதரை வேலைக்குப் போகுமாறு சரஸ்வதி கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீதர், அரிவாள்மனையால் சரஸ்வதியை வெட்டி, தலையில் கல்லைப்போட்டு கொன்றுள்ளார். தகவல் அறிந்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.