சேலம் மாவட்டம் ஏற்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 10, 12ஆம் வகுப்பு பயிலும் 10 மாணவிகளுக்கு அப்பள்ளியின் ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வந்த இளைய கண்ணு என்பவர், மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்த முழுமையான தகவல் இன்னும் வெளியாகவில்லை. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவம் அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.