ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 23,810 வாக்குகள் பெற்று டெபாசிட் இழந்தார். இந்த நிலையில், சீமானுக்கு நடிகை விஜயலட்சுமி, தனது பாணியில் வாழ்த்து கூறி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “வாழ்த்துகள் சீமான் அவர்களே, நீங்கள் தோற்பீர்கள் என தெரியும். ஆனால், இந்த அளவிற்கு பிரம்மாண்டமாக தோற்பீர்கள் என எதிர்பார்க்கல. என்னோட சாபம் உங்கள ஜெயிக்கவேவிடாது. இப்போ எப்படி இருக்கு? குளுகுளுனு இருக்கா?” என விமர்சித்துள்ளார்.