வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டு, கீழே தள்ளிவிடப்பட்டார். இதில் அவர் பலத்த காயமடைந்த நிலையில் வயிற்றில் இருந்த சிசு இறந்தது. இந்த சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ரூ.3 லட்சம் நிவாரண்மும், மருத்துவ செலவு முழுவதையும் அரசே ஏற்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்.