பெரம்பலூர் |

பெரம்பலூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு

பெரம்பலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத ரூபாய் 28, 500 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்ட சார் பதிவாளர் (பத்திரப்பதிவு) அலுவலகத்தில் இன்று(அக்.23) மாலை லஞ்ச ஒழிப்புத் துறை துணை காவல் கண்காணிப்பாளர் ஹேமச்சித்ரா தலைமையிலான 8 பேர் கொண்ட போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். தீபாவளி பண்டிகை நெருங்குவதை ஒட்டி முறையற்ற வகையில் அன்பளிப்புகள், பணப் பரிமாற்றங்கள் அதிகமாக இருக்கும் என்பதால் வழக்கமாக நடைபெறும் சோதனை இன்று மாலை நடைபெற்றது. 3 மணி நேரத்திற்கு மேல் நடைபெற்ற இந்த சோதனையில் பணியாளர்கள் மற்றும் இடைத்தரர்களிடமிருந்து கணக்கில் வராத ரூபாய் 28 ஆயிரத்து 500 ரொக்கப் பணம் மற்றும் சில ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றி உள்ளனர். இந்த திடீர் சோதனையினால், பெரம்பலூர் மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தில் பரபரப்பும், பணியாளர்களிடையே அச்சமும் ஏற்பட்டுள்து. தொடர்ந்து தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இதுபோன்ற திடீர் சோதனைகள் நடைபெறும் என்று லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோஸ்


தமிழ் நாடு