கடலூர் மாவட்டத்தை சேர்ந்த வேல்முருகன் என்பவர் தனியார் ஏஜென்சி மூலம் விசா பெற்று கத்தார் நாட்டில் கார் ஓட்டும் வேலைக்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு சென்ற பிறகு சுமார் 300 ஒட்டகங்கள் உள்ள பண்ணையில் பாகிஸ்தான் உள்ளிட்ட பிற நாட்டவருடன் ஒட்டகம் மேய்க்க விடுவதாக கூறியுள்ளார். அங்கு உள்ளவர்களிடம் இந்தியாவிற்கு செல்ல வேண்டும் என கேட்டால், காரில் ஏற்றி 10 கிலோமீட்டர் தூரத்தில் இறக்கிவிட்டு நடந்து வரச்சொல்வதாக கூறிய அவர், தன்னை எப்படியாவது காப்பாற்றுங்கள் என கோரிக்கை வைத்துள்ளார்.