
நாளை வெளியாகும் 'கேங்கர்ஸ்' படத்தின் டிரெய்லர்
15 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் சுந்தர் சி, வடிவேலு கூட்டணி இணைந்து 'கேங்கர்ஸ்' படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் வடிவேலு மற்றும் சுந்தர். சி-யுடன் இணைந்து கேத்ரின் தெரசா, வாணி போஜன் மற்றும் பலர் நடிக்கின்றனர். "கேங்கர்ஸ்" படம் ஏப்ரல் 24ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி நாளை (ஏப்ரல் 1) இப்படத்தின் டிரெய்லர் வெளியாக உள்ளது.