
யூஸ் பண்ணாத போன் நம்பர் இருக்கா?.. இனி பணம் அனுப்ப முடியாது
வங்கிக் கணக்குகளில் இணைக்கப்பட்டு, நீண்ட காலமாக செயல்படாமல் இருக்கும் மொபைல் எண்களை நீக்குமாறு வங்கிகள் & UPI செயலிகளுக்கு NPCI உத்தரவிட்டுள்ளது. அத்தகைய எண்களில் ஏப்ரல் 1 முதல் UPI சேவைகள் நிறுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. ஒரு மொபைல் எண்ணை 90 நாட்களுக்கு பயன்படுத்தப்படாவிட்டால், தொலைத்தொடர்பு வழங்குநர்கள் அதை வேறொருவருக்கு ஒதுக்கப்படும். இது சைபர் மோசடிக்கு வழிவகுக்கும் என்பதால் NPCI இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.