டாஸ்மாக்கில் ஒட்டப்பட்ட அண்ணாமலை போஸ்டர்

53பார்த்தது
டாஸ்மாக்கில் ஒட்டப்பட்ட அண்ணாமலை போஸ்டர்
டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி ஊழல் நடந்துள்ளது என கூறிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை விமர்சித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் டாஸ்மாக் முன்பு ஒட்டப்பட்ட போஸ்டரில் அண்ணாமலை சவுக்கால் அடித்து கொள்ளும் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. மேலும், போஸ்டரில், 'இக்கடையில் கூடுதல் விலைக்கு மதுவகைகள் விற்கப்படுவதில்லை' என எழுதப்பட்டுள்ளது. தமிழக டாஸ்மாக் கடைகளில் பாஜக மகளிர் அணியினர் முதல்வர் படத்தை ஒட்டியதை அடுத்து, இவ்வாறு பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி