
வடிவேலு, பகத் பாசில் நடிக்கும் "மாரீசன்" ரிலீஸ் அப்டேட்
'மாமன்னன்' படத்துக்குப் பிறகு பகத் பாசில், வடிவேலு இணைந்து நடிக்க உள்ள புதிய படத்துக்கு 'மாரீசன்' என தலைப்பிடப்பட்டுள்ளது. ஆர்பி சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 98-வது படமாக உருவாகும் இப்படத்தை சுதீஷ் சங்கர் இயக்குகிறார். 'மாமன்னன்' படத்துக்குப் பிறகு வடிவேலுவும், பகத் பாசிலும் இணைந்து நடிக்க உள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், இப்படம் ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாகும் எனத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.